Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஓலா திட்டம்...?

madhankumar July 29, 2022 & 18:08 [IST]
1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஓலா திட்டம்...?Representative Image.

தற்போது மின்சாரவாகனங்கள் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஓலா நிறுவனம் 1000 ஊழியர்களை பனி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஓலா நிறுவனம் தனது சில ஊழியர்களுக்கு பிங்க் நிற சீட்டுகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், மீதமுள்ள ஊழியர்களின் வருடாந்திர மதிப்பீடு இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னதாக இந்த நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலின் படி 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது மேலும் 1000த்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அளவிற்கான ஆட்குறைப்பிற்கு காரணம் என்னவென பார்த்தால் ஓலாவின் எலக்ட்ரிக் மொபிலிட்டி வணிகத்திற்காக அதிகரிப்பதற்காக செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் தனது மின்சார வாகன வணிகத்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் அல்லது ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஓலா நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆட்குறைப்புக்கு பெயர் இறுதி செய்யப்பட்டவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்