Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னது பானி பூரி சாப்பிட்டால் டைபாய்டு வருமா...? எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்.!

madhankumar July 18, 2022 & 16:43 [IST]
என்னது பானி பூரி சாப்பிட்டால் டைபாய்டு வருமா...? எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்.!Representative Image.

இந்தியாவில் தற்போது பருவமழை தொடங்கி பெய்துவருகிறது, பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துவருகிறது. மேலும் மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பெய்துவரும் மழையில் டைபாய்டு காய்ச்சலும் பரவி வருகிறது, இதற்கு காரணம் சாலையோர உணவான பானி பூரித்தான் காரணம் என சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.  மே மாதத்தில், தெலுங்கானாவில் 2,700 டைபாய்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,752 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொது சுகாதார இயக்குனர் டாக்டர் ஜி சீனிவாச ராவ், டைபாய்டை "பானி பூரி நோய்" என கூறியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் சாலையோர உணவுகளை தவிர்க்கவேண்டும் எனவும் குறிப்பாக பானி பூரியை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். விற்பனையாளர்கள் சுகாதாரத்தை உறுதி செய்து, பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ராவ் கூறினார்.

கடந்த சில வாரங்களில் பதிவு செய்த வைரஸ் காய்ச்சல்கள், மலேரியா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு அசுத்தமான நீர், உணவு மற்றும் கொசுக்கள் முக்கிய காரணங்களாகும். தெலுங்கானாவில் 6,000 க்கும் மேற்பட்ட வயிற்றுப்போக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெங்கு வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக பருவமழை காலத்தில் நீங்கள் பானி பூரி மற்றும் பிற சாலையோர உணவுகளை சாப்பிட ஆசைப்படுவீர்கள், ஆனால் உங்கள் ஆரோக்கியத்திற்காக அவற்றை தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரைப் பயன்படுத்தினால், நீங்கள் அருந்து டீ கூட பாதிப்பை உண்டாக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்