Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர்...ஜோ பைடனுடன் முக்கிய ஆலோசனை..!

madhankumar May 23, 2022 & 12:08 [IST]
குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற பிரதமர்...ஜோ பைடனுடன் முக்கிய ஆலோசனை..!Representative Image.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த குவாட் முதல் உச்சி மாநாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது, கொரோனா பாதிப்பால் அது காணொளி வாயிலாக நடந்தது. 2-வது உச்சி மாநாடு கடந்த செப்டம்பர் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதில் நான்கு நாடு தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த 3-வது குவாட் உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவே இந்திய பிரதமர் மோடி நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார். மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அப்பானீஸ் ஆகியோரை பிரதமர் மோடி தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் உட்பட பல்வேறு விஷங்கள் குறித்து குவாட் மாநாட்டில் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்