Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gas cylinder : சிலிண்டருக்கு 200 மானியம்..? பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Muthu Kumar May 22, 2022 & 13:30 [IST]
Gas cylinder : சிலிண்டருக்கு 200 மானியம்..? பொதுமக்கள் மகிழ்ச்சி..!Representative Image.

Gas cylinder : இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 9 கோடி மக்களுக்கு இந்த மானியம் கிடைக்கும். அதேபோல் வருடத்திற்கு தலா 12 சிலிண்டர் வீதம் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மானியம் யாருக்கு கிடைக்கும்?

இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எல்பிஜி மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வருட வருமானம் 10 லட்சதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இந்த மானியம் கிடையாது. மேலும் இந்த ஆண்டு வருமானம் கணவர் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தையும் கணக்கிடப்படுகிறது. 

மானியத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?

* அதிகாரப்பூர்வ இணையதளமான http://mylpg.in/ இல் உள்நுழைந்து உங்கள் எல்பிஜி ஐடியை உள்ளிடவும்.

* உங்கள் எல்பிஜி சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்து, 'ஜாய்ன் டிபிடி' என்பதைக் கிளிக் செய்யவும்.

* உங்களிடம் ஆதார் எண் இல்லையென்றால், டி.பி.டி.எல் விருப்பத்தில் சேர மற்ற ஐகானைக் கிளிக் செய்யவும்.

* இப்போது நீங்கள் விரும்பும் எல்பிஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

* பின்னர் புகார் பெட்டி திறக்கும், அதில் மானிய நிலையை உள்ளிடவும்.

* இப்போது மானியம் தொடர்பான என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

* இப்போது 'மானியம் பெறப்படவில்லை' ஐகானுக்கு கீழே உருட்டவும்.

* ஒரு டயலொக் பாக்ஸ் இரண்டு விருப்பங்களுடன் திறக்கும், அதாவது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் எல்பிஜி ஐடி.

* இப்போது 17 இலக்க எல்பிஜி ஐடியை உள்ளிடவும்.

* பின்னர் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை இதில் உள்ளிட்டு
* பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எல்பிஜி பெறுவீர்கள்.

* இப்போது அடுத்த பக்கத்திற்குச் சென்ற பிறகு, உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட்டு ஓடிபி ஐ உருவாக்கவும்.

* மேலே உள்ள செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும்.

* மீண்டும், http://mylpg.in கணக்கில் உள்நுழைந்து, பாப்அப் விண்டோவில் எல்பிஜி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டையுடன் உங்கள் வங்கியைக் குறிப்பிடவும்.

* சரிபார்த்த பிறகு, உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

* இப்போது சிலிண்டர் முன்பதிவு வரலாறு / மானியப் பரிமாற்றத்தைக் காண்க என்பதைத் கிளிக் செய்யவும்.

* இதுதவிர 18002333555 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டும் புகார் பதிவு செய்யலாம்.

இந்தியா முழுவதும் உள்ள சாமானியர்கள் வீட்டு எரிவாயுவிற்காக 1000 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை செலவிடும் நிலை உள்ளது. இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 999.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்த மானியம் அறிவித்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்