மெக்சிகோ நாட்டில் கேமியா என்ற 3 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அச்சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்து உறவினர்கள் சோகத்துடன் இறுதி சடங்குகளை செய்தனர். அப்போது சிறுமியின் கையை லேசாக அசைந்துள்ளது. மேலும், குழந்தை கண்விழித்து பார்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் சிறுமி உயிரிழக்கவில்லை என்பதை அறிந்ததும் மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அச்சிறுமி மீண்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக தான் குழந்தை உயிரிழந்துள்ளதால் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…