Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று வெளியாகிறது 10 மற்றும் 12 வகுப்பு முடிவுகள்..!

madhankumar June 20, 2022 & 08:33 [IST]
இன்று வெளியாகிறது 10  மற்றும் 12 வகுப்பு  முடிவுகள்..!Representative Image.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிடுகிறது.

இன்று (ஜூன்20 ) காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள  அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த நிமிடமே மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் http://www.tnresults.nic.in/https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.

அதே போல இன்று 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பள்ளி மாணவர்கள் உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகள் வெளியான உடன் தேர்வுகள் இயக்கத்தில் அதிகாரபூர்வ இணையதளமான  https://www.dge.tn.gov.in/ க்கு சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்