Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆகஸ்ட் 4ல் தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...!

madhankumar July 31, 2022 & 17:19 [IST]
ஆகஸ்ட் 4ல் தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...!Representative Image.

இன்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் மஹாலில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த  விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய  அகில இந்திய செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

தேர்தல் காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார், ஆனால் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 1 லட்சம் ஊதியம் பெறுவோருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்திருந்தார். 

தொடக்கப்பள்ளிலகைள 3 வகுப்புகளுக்கு 1 ஆசிரியர் பாடம் எடுத்துவருகிறார், எனவே காலியாக உள்ள 14,000 ஆசிரியர் பணிகளை நிரப்ப கோரியும், தமிழக அரசை கண்டித்தும், ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆகஸ்ட்  4 ம் தேதி மாலை தமிழகத்தின் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 1 லட்சம்  ஆசிரியர்கள் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதன் பிறகும் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்." என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்