Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை வெளியாகும் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள்...என்ன மாணவர்களே தயாரா...?

madhankumar June 26, 2022 & 10:24 [IST]
நாளை வெளியாகும் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள்...என்ன மாணவர்களே தயாரா...?Representative Image.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகளில் தேர்வுக்க நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து கொரோனா குறைந்ததையடுத்து இந்த ஆண்டு பொது தேர்வுகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர். 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியிடப்பட்டன.தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். +2 தேர்வில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் 11ம்  பொது தேர்வு முடிவுகள்  நாளை ஜூன்27ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 27 திங்கட்கிழமை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை மாணவர்கள்  http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற  அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்