Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜெயலலிதா மரணம்....விசாரணையை முடித்த ஆறுமுக ஆசாமி ஆணையம்...!!

madhankumar June 26, 2022 & 08:27 [IST]
ஜெயலலிதா மரணம்....விசாரணையை முடித்த ஆறுமுக ஆசாமி ஆணையம்...!!Representative Image.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், புகார்களும்  எழுந்தன. இதன் அடிப்படையில் அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள 2017ல்  தமிழக அரசு, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையத்தில் இதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து  150க்கும் மேற்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சமீபத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு  ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது.

அவரின் மரணம் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மக்கள் இவரை ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது சசிகலாதன் 75 நாட்கள் உடனிருந்து பார்த்துக்கொண்டார் எனவும், தான் அவ்வப்போது மருத்துவமனை சென்றேன் மேலும் கதவின் கண்ணாடி வழியாகத்தான் நான் அவரை பார்த்தேன் என கூறினார்.

இதே போல் ஓபிஎஸ் இடம் விசாரணை நடத்தப்படும் போது அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனவும் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடட்பட்டது. இதனை அடுத்து விசாரணை குறித்து இறுதி அறிக்கை தயார் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை முடித்துள்ள நிலையில்,இறுதி அறிக்கையை தயார் செய்ய மேலும் ஒரு மாதம் 9 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  ஜூன் 24 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், ஆகஸ்ட்3 ம் தேதி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்