Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 12,998பேருக்கு டெங்கு பாதிப்பு

Baskarans Updated:
கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 12,998பேருக்கு டெங்கு பாதிப்புRepresentative Image.

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் தொடர்ந்து டெங்கு, எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 12,998பேருக்கு பாதிப்பு உறுதியானது.

அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், எலி காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அம்மாநில சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிசிச்சை அளிக்க பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இதே போல், கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில், எலி காய்ச்சலுக்கு தலா ஒருவர் பலியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டில் எலி காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில், 2,024 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதை தவிர திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களிலும், 1,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 12,998பேர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மேலும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எலி காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநில எல்லைகளில், தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்