Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.....தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்..!

madhankumar July 17, 2022 & 13:14 [IST]
மதிய உணவு சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.....தீவிர சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்..!Representative Image.

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஐஐஐடி-பாசார் என்றும் அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவுத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில், 150 மாணவர்கள் மதிய உணவு சாப்பிடத்தான் காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் முஷாரப் அலி ஃபரூக்கி கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட 150 மாணவர்களில் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று கூறினார்.

தற்போது மாணவர்களின் உடல் நிலை சீராக உள்ளது எனினும் 2 மாணவர்களுக்கு மட்டும் உடல் நிலை சற்று மோசமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விடுதியின் மெஸ் ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வளாக மருத்துவமனையில் 14 டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். 

இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர் இந்திரகரன் ரெட்டி மாணவர்களுக்கு மதிய உணவாக முட்,டை கறி, சாதம் வழங்கப்பட்டது. சுமார் 150 மாணவர்கள் உணவை சாப்பிட்ட பிறகு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர். மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர் எனவும் இந்த மதிய உணவை 600 மாணவர்கள் சாப்பிட்டனர் எனவும் மீதமுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்