Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Amazon : அமேசானுக்கு 200 கோடி அபராதம்..?

Muthu Kumar June 14, 2022 & 12:54 [IST]
Amazon : அமேசானுக்கு 200 கோடி அபராதம்..?Representative Image.

Amazon : அமேசான் நிறுவனத்திற்கு 200 கோடி அபராதம் விதித்த தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்.

ப்யூச்சா் கூப்பன்ஸ் என்ற நிறுவனத்தின் 49% பங்குகளை அமேசான் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் சில தகவல்களை மறைத்து இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனம் சிசிஐயிடம் புகாரளித்தது. மேலும், இந்த ஒப்பந்தம் அமேசான் நிறுவனம் சில்லரை விற்பனையில் நுழையும் வகையில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வழக்குபதிவு செய்த சிசிஐ, விசாரணை நடத்தியது அதில், ப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை அமேசான் நிறுவனம் மீறியுள்ளதால் அந்த நிறுவனம் 202 கோடி அபராதம் செலுத்த கடந்த டிசம்பர் மாதம் சிசிஐ உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த அமேசான் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். வேணுகோபால் மற்றும் அசோக் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு சிசிஐ ரூ.200 கோடி அபராதம் விதித்த உத்தரவை உறுதி செய்து தீர்பளித்தனர். மேலும், இந்த தொகையை 45 நாட்களுக்குள் அமேசான் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்