Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே ஆட்டோவில் பயணம் செய்த 27 பேர்...உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா..?

madhankumar July 11, 2022 & 17:21 [IST]
ஒரே ஆட்டோவில் பயணம் செய்த 27 பேர்...உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா..?Representative Image.

உத்திரபிரதேச மாநிலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களை இறங்க சொல்லியுள்ளனர். அப்போது அதில் இருந்து இறங்கியவர்களை பார்த்து போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாம் நேரடியாக பார்த்த சில பயணங்களில் 10 நபர்களை ஒரு ஆட்டோவிலோ அல்லது ஒரு காரிலோ ஆடுகள் போல் அடைத்துவைத்து கொண்டுசெவத்தை பார்த்திருப்போம், அவ்வாறு உத்திரபிரதேசத்தில் ஒரு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலையில் செல்லும் ஆட்டோ ஒன்றை நிறுத்தும் போலீசார் அதில் இருக்கும் நபர்களை இறங்க சொல்கின்றனர்.

அப்போது முதலில் ஓட்டுநர் பகுதியில் வெளியில் இருந்து வரும் ஒருவர், கூடவே ஒரு சிறுவனையும் வெளியில் இழுத்துப் போடுகிறார். அதன் பின்னர் குழந்தைகள், பெரியவர்கள் என அடுத்தடுத்து வரிசையாக இறங்குகின்றனர். ஆட்டோவை தடுத்து நிறுத்திய காவலர், ‘ஒன்று, இரண்டு'.. என ஆட்டோவில் இருந்து இறங்குபவர்களை எண்ணுகிறார். 

அப்படி ஒவ்வொருத்தராக இறங்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 27 என முடிகிறது, ஓட்டுனரும் சேர்த்துதான். அதெப்பிடி சாத்தியம் என விடியோவை பார்த்த பலரும் சந்தேகித்து வருகின்றனர். ஒருவேளை படங்களில் வருவது போல ஒரு பக்கம் ஏறி மறுபக்கம் இறங்கி வருகிறார்களோ என கூறிவருகின்றனர். காரணம் வீடியோவானது தெளிவில்லாமல் பாதி ஆட்டோவை மட்டும் எடுத்துள்ளனர். இருந்தாலும் இது  தமாஷாக உள்ளது என பலர் கமெடுக்கள் இட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்