Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜி20 நாடுகளின் 3 நாள் நிதி கட்டமைப்பு மாநாடு..! மாமல்லபுரத்தில் இன்று தொடக்கம்..!!

Saraswathi Updated:
 ஜி20 நாடுகளின் 3 நாள் நிதி கட்டமைப்பு மாநாடு..! மாமல்லபுரத்தில் இன்று தொடக்கம்..!!Representative Image.

சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு தொடர்பான 3வது மாநாடு இன்று தொடங்குகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஜி20 என்பது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, தென் கொரியா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பு ஆகும்.  

இந்த கூட்டமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமைப் பதவி வகிக்கும்.  அதன்படி 2023-ம் ஆண்டின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள்  ஒன்றுகூடி, கல்வி, நிதி, பொருளாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, கலாசாரம், சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி, பெண்கள் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதம் மேற்கொண்டுவருகின்றனர்.  

அதன் ஒரு பகுதியாக, ஜி20 நாடுகளின் நிதி கட்டமைப்பு தொடர்பான 3-வது மாநாடு மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 21-ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில்,  ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்காக நிதியை செயல்படுத்துதல், நிலையான வளர்ச்சியை நோக்கி நிதியளிப்பதற்காக சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை கட்டியெழுப்புதல், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்தல்,  தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான மூலதனத்தை அதிகப்படுத்துவது  உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.  

மாமல்லபுரத்தின் செழுமையான கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்த உள்ளூர் உல்லாச பயணங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்ககப்பட்டுள்ளது. நிறைவு நாளான 21-ந் தேதி, சர்வதேச யோகா தினம் என்பதால், இந்த மாநாட்டில் சிறப்பு யோகா அமர்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்