Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி பேதி.. அரசு பள்ளியில் பரபரப்பு!!

Sekar September 23, 2022 & 15:14 [IST]
சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி பேதி.. அரசு பள்ளியில் பரபரப்பு!!Representative Image.

விழுப்புரம் அருகே பள்ளியில் சத்து மாத்திரையை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ மாணவியர் அடுத்தடுத்து வாந்தி எடுத்து, மயக்கமடைந்ததால், பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே வெங்கந்தூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வரும் நிலையில், மாணவ மாணவியரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் நேற்று சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மாத்திரைகளை சாப்பிட்ட மாணவ மாணவிகள் 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மாணவர்களின் நலன் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்து மாணவர்களுக்கு தைரியமூட்டினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்