Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலக அகதிகள் தினம் 2023: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்..! | World Refugee Day 2023

Gowthami Subramani Updated:
உலக அகதிகள் தினம் 2023: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்..! | World Refugee Day 2023 Representative Image.

ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் நாள், உலக அகதிகள் தினமாகக் கூறப்படுகிறது. எல்லா உயிர்களும் மதிப்பு மிக்கவை என்பதை உணர்த்தும் நாளாகவே, இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. சொந்த நாட்டில் வசிக்க முடியாத நிலை மிகவும் கொடுமையான ஒன்று. இந்த பெரும் துக்கத்தைத் தாங்கிக் கொண்டு, வேறொரு நாட்டில் தஞ்சமடைகின்றனர். இந்த உலக அகதிகள் தின வரலாறு, முக்கியத்துவம், மற்றும் ஏன் இந்த நாள் ஜூன் 20 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

உலக அகதிகள் தினம் 2023: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்..! | World Refugee Day 2023 Representative Image

யார் அகதிகள்?

அகதிகள் என்ற சொல் இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் உரித்தானவை என்றே கூறலாம். சொந்த நாடு, வீடு என இல்லாமல் தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு குடும்பமோ நடுத்தெருவில் விடப்பட்டவர்களை அகதிகள் எனக் கூறுவர். அதிலும், போர் காலத்தில் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாவது யாவரும் அறிந்த ஒன்று. சொந்த நாடுகளில் வசிக்க முடியாமல், அந்நிய நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வாழ்வாதாரத்தைத் தேடி அலைவர்.

உலக அகதிகள் தினம் 2023: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்..! | World Refugee Day 2023 Representative Image

உலக அகதிகள் தினம் வரலாறு

நாட்டு மக்கள் அகதிகளாக மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பினும், முக்கியமானதாக கருதப்படும் காரணம் போர். அகதிகள் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு, அகதிகள் குறித்தும், அவர்களின் உரிமை, புகழிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த உடன்பாடு ஆகும். இந்த உடன்பாடு ஆனது கடந்த டிசம்பர் 4, 1952 ஆம் ஆண்டு டென்மார்க்கில் உறுதி செய்யப்பட்டது. மேலும், 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுசபையில் சிறப்பு தீர்மானம் இயற்றப்பட்டது. இவ்வாறு அகதிகளுக்கு ஆதரவு தரும் வகையிலேயே உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், ஜூன் 20 ஆம் நாள் ஆப்பிரிக்க அகதிகள் தினம் அனுசரிக்கப்படுவதால், இந்த தினமே உலக அகதிகள் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.

உலக அகதிகள் தினம் 2023: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்..! | World Refugee Day 2023 Representative Image

உலக அகதிகள் தினம் முக்கியத்துவம்

இந்த உலக அகதிகள் தினத்தில், உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் அகதிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக அனுசரிக்கப்படுகிறது. இத்தினம், அவர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளை முன்னிலைப்படுத்தவும் அமைகிறது. மேலும், இத்தினத்தில் அகதிகள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நிலமைகள் மற்றும் சிரமங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த உலக அகதிகள் தினத்தில், பல்வேறு காரணங்களுக்காக அகதிகளாக மாறியவர்களை நினைவு கூறும் வகையில் கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், விழிப்புணர்வு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

உலக அகதிகள் தினம் 2023: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்..! | World Refugee Day 2023 Representative Image

இன்றும் தொடரும் நிலை

உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து மற்ற இடங்களுக்குத் தஞ்சம் புகுந்தனர். இலங்கை, சிரியா போன்ற இடங்களில் நடந்த உள் நாட்டுப் போரின் காரணமாக, அகதிகளாக வெளியேறினர். நீண்ட காலமாக நடைபெற்று ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாகவும், ஏராளமானோர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குச் சென்றனர். மேலும், கொரோனா காலகட்டத்தில் தங்களுடைய வீடு, சொத்து என அனைத்தையும் விட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மற்ற நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

இது போன்ற பல்வேறு சூழ்நிலைகளால், தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி அலையும் ஒவ்வொரு அகதிகளும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்