Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Saraswathi Updated:
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!Representative Image.

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பல இடங்களில் 105 டிகிரி வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.  

தென்மேற்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசைக் காற்று, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம்,  புதுச்சேரி மாநிலங்களில் இன்று சில இடங்களிலும், ஜூன்14, 15, 16 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைவரை பெய்யக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில்,  தமிழகம், புதுச்சேரியின்  ஓரு சில  இடங்களில் இன்று வெப்பத்தின் அளவு 102 டிகிரி முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் என்றும்,  ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்  லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  நகரின் அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவையொட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளது. 

இன்று காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழையும் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கெட்டி, சென்னை மாதவரம், பெரம்பூர், தண்டையார்பேட்டை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வ மையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்