Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டுகள் சிறை...நீதிமன்ற அதிரடி.!

madhankumar May 27, 2022 & 16:18 [IST]
முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டுகள் சிறை...நீதிமன்ற அதிரடி.!Representative Image.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறைத்தண்டனையுடன் சேர்த்து ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதலா. இவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1999 2004 வரை அரியானா முதல்வராக இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக ரூ.6.10 வரை சொத்து சேர்த்ததாக சிபிஐ இவர் மீது வழக்கு பதிவு செய்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் மீதுள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீண்டகாலமாக நீடித்துவந்த இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தடனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரத்து சொத்துக்களை பரிவுதல் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்