Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுட சுட மட்டன் பிரியாணி...இன்னிக்கு ஒரு புடி...காவலர்களுக்கு விருந்து வைத்த டிஜிபி...!

madhankumar August 11, 2022 & 16:21 [IST]
சுட சுட மட்டன் பிரியாணி...இன்னிக்கு ஒரு புடி...காவலர்களுக்கு விருந்து வைத்த டிஜிபி...!Representative Image.

கடந்த 12 நாட்களாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது, இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். போட்டி மிகவும் அமைதியான முறையில் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும் என தமிழக போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த செஸ் போட்டிகள் நடந்த இடத்தை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த போட்டியில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்று இருந்த வீரர்கள் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி இருந்தனர், அவர்கள் ஓட்டல்களில் இருந்து போட்டி நடைபெறும் அரங்கத்திற்கும், பின்னர் அரங்கத்திலிருந்து ஹோட்டலுக்கும் சென்ற வண்ணம் இருந்தனர்

அவர்களின் பாதுகாப்பிற்காக இரவு பகல் பாராது தூங்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், வந்திருந்த போட்டியாளர்கள்  செஸ் போட்டி மிக சிறப்பாக நடந்தது, இதுவரை எந்த நாட்டிலும் நடந்திராத அளவிற்கு உபசரிப்பு,  பாதுகாப்பு என எல்லா அம்சங்களும் இந்த மிக சிறப்பாக இருந்தது என வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை டிஜிபி சைலேந்திர பாபு வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. அப்போது அவர்களுடன் அமர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி உண்டார். போலீசாருக்கு அவரே பிரியாணி பரிமாறினார். இது அங்கிருந்த காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்