Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Doodle: இன்று கூகுள் டூடுல் கொண்டாடும் மரியா டெல்கேஸ் யார் தெரியுமா? 

kanimozhi Updated:
Google Doodle: இன்று கூகுள் டூடுல் கொண்டாடும் மரியா டெல்கேஸ் யார் தெரியுமா? Representative Image.

உலகின் மிகப்பெரிய சர்ச் இன்ஜின் ஆன கூகுள் வரலாற்றுச் சாதனை படைத்த விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகளை கெளரவிக்கும் விதமாக டூடுல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கூகுள் டூடுல் வெளியிட்டிருக்கும் மரியா டெல்கேஸ் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்... 

Google Doodle: இன்று கூகுள் டூடுல் கொண்டாடும் மரியா டெல்கேஸ் யார் தெரியுமா? Representative Image

யார் இந்த மரியா டெல்கெஸ்? 

சூரிய சக்தியை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வில் முன்னோடியாக இருந்த ஹங்கேரிய-அமெரிக்க விஞ்ஞானி மரியா டெல்கேஸை கூகுள் இன்று  டூடுல் கொண்டாடுகிறது. அவர் பல சூரிய ஆற்றல் மூலம் இயக்கக்கூடிய பல சாதனங்களைக் கண்டுபிடித்தோடு, தனது வாழ்நாள் முழுவதும் 20 கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமைகளையும் வாங்கியுள்ளார். 

மரியா டெல்கேஸ், டிசம்பர் 12, 1900 அன்று புடாபெஸ்டில் பிறந்தார். 1920 இல் இயற்பியல் வேதியியலில் பட்டம் பெற்ற மரியா டெல்கோஸ், 1924ம் ஆண்டு பி.எச்.டி பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1925ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மரியா, Massachusetts இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பணியாற்றத் தொடங்கினார். இவருடைய சூரிய ஆற்றலின் நடைமுறை பயன்பாடுகள் பற்றிய ஆய்வு உலக அளவில் கவனம் பெற்றது. 
 

Google Doodle: இன்று கூகுள் டூடுல் கொண்டாடும் மரியா டெல்கேஸ் யார் தெரியுமா? Representative Image

கண்டுபிடிப்புகள்: 

எம்ஐடி-யில், சோடியம் சல்பேட்டுகளைப் பயன்படுத்தி சூரிய ஆற்றலைச் சேமிக்கும் முறையை மரியா உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து 1939ம் ஆண்டு முதல் சூரிய ஆற்றல் ஆராய்ச்சித் துறையில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். 

நேச நாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அமெரிக்கா போரிலும் தனது கண்டுபிடிப்புகள் மூலமாக பங்கெடுத்தார். சூரியனின் ஆற்றலைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டக்கூடிய  சாதனத்தை மரியா டெல்கேஸ் உருவாக்கியது, பல வீரர்களின் உயிரைக் காப்பாற்ற உதவியது.

கடல் நீரை ஆவியாக்கி, பின்னர் அதை ஒடுக்கி, குடிநீரை வழங்கக்கூடிய  சாதனத்தையும்  மரியா டெல்கேஸ் உருவாக்கியது வரலாற்றுச் சாதனையாக கருதப்பட்டது. ‘சோலார் தெமல் ஸ்டோரேஜ் சிஸ்டம்’ உருவாகியவர்களில் மரியா டெல்கேஸ் மிகவும் முக்கியமானவர் ஆவார். இதனால் இவர் செல்லமாக ‘தி சன் குயின்’ என அழைக்கப்பட்டார். 

போர் நிறைவடைந்த பிறகு,  எம்ஐடி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியை தொடங்கிய மரியா டெல்கேஸ், தொடர்ந்து ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வந்தார்.  

உலகின் முதல் சூரிய வெப்ப வீட்டைக் கண்டுபிடித்த பெருமையும் இவருக்கு உண்டு. இதற்காக, ஃபோர்டு அறக்கட்டளையிடமிருந்து $45,000 மானியம் பெற்றார். அதனையடுத்து 1953ம் ஆண்டு, சூரிய அடுப்பை உருவாக்கி சாதனை படைத்தார். 

Google Doodle: இன்று கூகுள் டூடுல் கொண்டாடும் மரியா டெல்கேஸ் யார் தெரியுமா? Representative Image

சாதனையும், மறைவும்: 

மரியா டெல்கேஸ்,என்ஒய்யூ, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் சூரிய ஆற்றல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். தனது வாழ்நாளின் பெரும் பகுதிகளை சூரிய சக்தி குறித்து ஆய்வு செய்ய பயன்படுத்தியன் டெல்கேஸ், தனது 20க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.  பல ஆற்றல் நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வந்த மரியா டெத் கேஸ், 1995ம் ஆண்டு மரணமடைந்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்