தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மத்திய தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடந்துவருகின்றன. பரம்பு பகுதியில் இதுவரையில் மேற்கொண்ட அகழாய்வின் போது 400க்கும் மேற்பட்ட பொருட்களும், வாழ்விட பகுதிகளில் 300 பொருட்களும், 48 முது மக்கள் தாழிகளுமே கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் குழந்தைகள் விளையாட்டில் பயன்படுத்தும் வட்டசில்கள், பெண்களின் அணிகலன்கள், சதுரங்க காய்கள், நூல் நூற்க பயன்படும் தக்களி, சுடுமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், எலும்புகளால் ஆன மற்றும் கற்களால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
மேலும் ஆவரங்காடு திட்டு என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுடாத செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டுமானம், பராக்கிரம பாண்டி திரட்டல் செங்கற்களால் ஆனா வடிகால் அமைப்பு, போன்ற முக்கிய கட்டுமான அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதன்முறையாக தங்கத்தினாலான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப் பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது சிறிய அளவிலான தங்கத்தாலான பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரையில் மண் எலும்புகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தங்கத்தினால் ஆனா பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…