Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிறிஸ்துவ தேவாலயத்தில் தீ விபத்து.. 41 பேர் பலியான பரிதாபம்!!

Sekar August 15, 2022 & 11:15 [IST]
கிறிஸ்துவ தேவாலயத்தில் தீ விபத்து.. 41 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள காப்டிக் கிறிஸ்தவ தேவாலயத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடமேற்கு, தொழிலாள வர்க்க மாவட்டமான இம்பாபாவில் உள்ள அபு சிஃபின் தேவாலயத்தில் அறியப்படாத காரணங்களுக்காக தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி தனது முகநூல் பக்கத்தில், "அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நான் அனைத்து அரசு சேவைகளுக்கும் விரைவான நடவடிக்கையாக உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

எகிப்தின் 103 மில்லியன் மக்களில் குறைந்தது 10 மில்லியனைக் கொண்ட மத்திய கிழக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ சமூகம் காப்ட்ஸ் ஆகும்.

காப்ட்ஸ் சமூகம் இஸ்லாமியர்களிடமிருந்து தொடர்ந்து பழிவாங்கலுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக 2013 இல் சிசி முன்னாள் இஸ்லாமிய ஜனாதிபதி மொஹமட் மோர்சியை அகற்றிய பின்னர், தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன.

அரபு உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட வட ஆப்பிரிக்க நாடான எகிப்தில் பெரும்பான்மை முஸ்லீம்களில் பாகுபாடு காட்டப்படுவதாக இந்த சிறுபான்மையின கிருஸ்துவ சமூகம் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியான சிசி, ஒவ்வொரு ஆண்டும் காப்டஸ் கிறிஸ்துமஸ் மாஸ்ஸில் கலந்து கொள்வதோடு, எகிப்து வரலாற்றில் முதல்முறையாக தலைமை நீதிபதியாக ஒரு காப்டிக் நீதிபதியை சமீபத்தில் நியமித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்