Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India : அதிர்ச்சி... இந்தியாவில் தரமற்ற 41 மருந்துகள்..?

Muthu Kumar June 11, 2022 & 15:45 [IST]
India : அதிர்ச்சி...  இந்தியாவில் தரமற்ற 41 மருந்துகள்..?Representative Image.

India : இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 41 மருந்துகள் தரமற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை ஆங்கில மருந்துகளையும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த ஆய்வில் போலி மருந்துகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் இந்தியாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 1,233 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தரமற்றுள்ள மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டவை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளனா்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்