Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிறந்தநாளில் பிரதமருக்கு 51 அடி உயர இரும்பு சிலை.. 

Nandhinipriya Ganeshan September 17, 2022 & 12:00 [IST]
பிறந்தநாளில் பிரதமருக்கு 51 அடி உயர இரும்பு சிலை.. Representative Image.

பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாஜக பிரமுகர்கள் மற்றும் பிரதமரின் நலன் விரும்பிகள் பல்வேறு நிகழ்வுகளுக்கும், நலத் திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட சில தனித்துவமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு குஜராத் பகுதியில் உள்ள அம்ரேலி மாவட்டத்தின் சர்வகுண்டலா என்ற பகுதியில் பிரதமருக்கு 51 அடி இரும்பு சிலை அமைக்க மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஏற்பாடுகளை செய்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று இதற்கான பூமி பூஜைகளை நடைபெறுகின்றன.

அந்த மாவட்டத்தின் பாஜக துணை தலைவர் சுரேஷ் பன்சூரியா அங்குள்ள தொழிலதிபர்களுடன் இணைந்து பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று 400 ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கின்றார். அத்துடன் பிரதமர் மோடியின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்துகின்றனர். இந்த யாகத்தில் சுமாப் 10,000 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்