Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக.. இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..

Nandhinipriya Ganeshan September 17, 2022 & 11:30 [IST]
ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக.. இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..Representative Image.

குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி சிறப்பாக செயல்பாட்டதால், தேசிய பாஜக அவரை கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. பின்னர், தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாஜக மறுபடியும் வெற்றி பெற்று 2வது முறையாகவும் மோடி பிரதாரானார். தற்போது, நம் நாட்டின் பிரதமராக 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மோடியின் இந்த சாதனைகளை கூறி பாஜகவினர் அடுத்துவரும் தேர்தலுக்கும் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். 

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா பெரியளவில் கொண்டாடப்படவில்லை. அந்தவகையில், நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாளை இன்று முதல் அக்டோபர் 2 வரை, 15 நாட்களுக்கு வேற்றுமையில் ஒற்றுமை என்று பெயரில் பாஜக கொண்டாவுள்ளது.  

இந்த நிகழ்ச்சியின் முதன்மையான நோக்கமாக நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் "ஒரே இந்தியா மகத்தான இந்தியா" என்ற பிரச்சாரத்தில் பாஜக தொண்டர்கள் ஈடுபடுகிறார்கள்.

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று, தூய்மை இயக்கம், மருத்துவ முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், அன்னதானம் உள்ளிட்ட பணிகளையும் பாஜகவினர் மேற்கொள்ளவுள்ளனர். பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்ல 'நமோ' மொபைல் செயலியில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தலா 2 கிராம் தங்க மோதிரம் பரிசாக அணிவிக்கப்படுகிறது. பிரதமரின் பிறந்தநாளுக்காக சென்னை கொளத்தூரில் 720 கிலோ மீன்கள் கொடுக்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை