Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5G அலைக்கற்றை ஏலம்...கடும் போட்டியில் வெல்லப்போவது யார்..?

madhankumar July 25, 2022 & 13:18 [IST]
5G அலைக்கற்றை ஏலம்...கடும் போட்டியில் வெல்லப்போவது யார்..? Representative Image.

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை செயல்படுத்த மத்திய தொலைத் தொடர்பு துறை டிராய் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஏலம் விடும் பணி நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற  பட்ஜெட் தாக்கலின் போது 5ஜி தொழில்நுட்பம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏலத்தை ஜூலை மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மேற்கொண்டுள்ளது.

தற்போது மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மூலம் 4.5லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தின் காலம் மொத்தம் 20 ஆண்டுகள் ஆகும், இந்த ஏலத்தை எடுக்க பெரிய நிறுவனங்களான அதானி குழுமம், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

முன் வைப்பு தொகை அடிப்படையில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கக் கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில்  ரிலையன்ஸ் ஜியோ 14 ஆயிரம் கோடியும், ஏர்டெல் 5,500 கோடியும் முன் வைப்பு தொகையை செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன் வைப்பு தொகையை விட 10 மடங்கு கூடுதல் மதிப்பில் அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க இந்த 2 நிறுவனங்களுக்கு உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்