Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே விபச்சாரம்.. சிக்கிய பாஜக துணைத் தலைவர்?

Sekar July 24, 2022 & 23:45 [IST]
வீட்டிலேயே விபச்சாரம்.. சிக்கிய பாஜக துணைத் தலைவர்?Representative Image.

மேகாலயாவின் துரா எனும் பகுதியில் பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் என் மரக் என்பவர் நடத்தி வந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதியில் இருந்து 6 குழந்தைகள் மீட்கப்பட்டதாக மேற்கு கரோ ஹில்ஸ் எஸ்பி விவேகானந்த் சிங் தெரிவித்துள்ளார்.

போராளியாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய மரக்கிற்கு சொந்தமான ரிம்பு பாகன் என்ற பண்ணை வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்று மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் சிங் தெரிவித்தார்.

இந்த சோதனையின்போது 73 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது டிங்கி கேபின் போன்ற சுகாதாரமற்ற அறைகளுக்குள் பூட்டப்பட்டிருந்த நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என ஆறு சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் (டிசிபிஓ) பாதுகாப்பாக காவலில் வைக்கப்பட்டு, சட்டப்படி மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையே சோதனையில், சுமார் 400 மதுபாட்டில்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 73 பேர் தீய செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர். பண்ணை வீட்டில் 30 சிறிய அறைகள் உள்ளன.

இது ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பிப்ரவரி 2022 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது என விவேகானந்த் சிங் மேலும் தெரிவித்தார்.

எனினும் காரோ பழங்குடியின தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான மரக் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தான் விபச்சார விடுதி நடத்துவதாக கூரப்பப்டும் குற்றச்சாட்டை மறுத்து, சோதனைக்காக முதல்வர் கான்ராட் கே சங்மாவை விமர்சித்துள்ளார்.

"முதல்வர் தனது தெற்கு துரா தொகுதியை பாஜகவிடம் இழப்பதை அறிந்ததால் விரக்தியடைந்துள்ளார். எனது பண்ணை வீட்டில் நடந்த சோதனை எனது இமேஜைக் கெடுக்க அவர் மேற்கொண்ட அவநம்பிக்கையான முயற்சி மற்றும் அரசியல் பழிவாங்கும் முயற்சி" என்று அவர் கூறினார்.

சங்மாவின் என்பிபி தலைமையிலான ஆளும் மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் அங்கம் வகிக்கும் நிலையில், இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்