Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்...முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

madhankumar July 23, 2022 & 17:21 [IST]
மரம் வளர்த்தால் மின்சாரம் இலவசம்...முதல்வர் அதிரடி அறிவிப்பு..!Representative Image.

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் நடைபெற்ற நாட்டில் 73 வது சுதந்திர தின விழாவில் கணைத்துக்கொண்டு பேசினார். அப்போது வீட்டில் மரம் நட்டு அதனை பாதுகாத்து வளர்ப்பவர்களுக்கு ஒரு மரத்திற்கு தலா 5 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர் ‘‘நடப்பாண்டில் 2.3 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு 1.8 கோடி அளவுக்கு மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் எல்லாம் கான்கிரீட் மயமாகிவிட்டது எனவே அனைவரும் வீட்டிற்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் அவ்வாறு வளர்த்தால் மாதம் 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் அணைத்து மரமாக மட்டுமே இருக்க வேண்டும் செடியாக இருந்தால் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பொது மக்களும் வரவேற்பளித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்