Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

73 வயதில் சைக்கிள் பயணம்; 3000 கி.மீ. கடந்த டெல்லி ஐஐடி பேராசிரியரின் அசாத்திய துணிச்சல்! 

KANIMOZHI Updated:
73 வயதில் சைக்கிள் பயணம்; 3000 கி.மீ. கடந்த டெல்லி ஐஐடி பேராசிரியரின் அசாத்திய துணிச்சல்! Representative Image.

சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் 73 வயது பேராசிரியரை ஓசூரில் மாணவர்கள் கெளரவித்தனர். 

 

டெல்லி ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரண்சேத் 73 வயது, இவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார், சுமார் 3000 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளும் இவர் நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை பயணம் செய்கிறார்.

 

கடந்த ஆகஸ்ட் 15 ல் ஸ்ரீநகரில் தமது சைக்கிள் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழக எல்லையான ஓசூர் வந்தடைந்தார். இவருக்கு தனியார் பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌவுரப்படுத்தப்பட்டது.

 

பின்னர் நடைபெற்ற சிறப்புக்  கூட்டத்தில், டாக்டர் கிரண்சேத்  ஓசூரின் முக்கிய பிரமுகர்களையும் பத்திரிக்கையாளர்களையும்  சந்தித்தார். டைட்டன் கம்பெனி நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பட் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

பின்னர் டாக்டர் கிரண்சேத் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், இந்த சைக்கிள் பயணம் மூன்று இலக்குகளாக கொண்டது,முதலாவதாக உடல் ஆரோக்கியம், சுற்றுசூழல், இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தை அனைத்துத் தலைமுறையினருக்கும்  கொண்டு சேர்ப்பது, மகாத்மா காந்தி அவருடைய செயல்பாடுகள் மீண்டும் நினைவூட்டுதல் தமது சைக்கிள் பயணத்தின் நோக்கமாகும் என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்