Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெப்ப அலையால் 84 பேர் மரணம்....அதிர்ச்சியில் மக்கள்..!

madhankumar July 16, 2022 & 17:28 [IST]
வெப்ப அலையால் 84 பேர் மரணம்....அதிர்ச்சியில் மக்கள்..!Representative Image.

ஸ்பெயின் நாட்டில் தொடர்ந்து 3 நாட்கள் நிலவிய வெப்ப அலையால் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாடு மருத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் மருத்துவ நிறுவனம் இது குறித்த அறிக்கை ஒன்றை அந்த நாட்டு மருத்துவ அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த 10, 11, 12 ஆகிய 3 நாட்களில் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பம் நிலவி உள்ளது. 40 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் நிலவியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

இந்த நிலை மேலும் அதிகரிக்கும் எனவும் இதனால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கக்கூடும் என தெறிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி முதல் 20ம் தேதிவரையிலான கால கட்டத்தில் வெப்ப அலை காரணமாக மொத்தம் 829  பேர் உயிரிழந்து இருப்பதாக ஸ்பெயின் மருத்துவ அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44.5 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த வெயிலின் கோரா தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அதிக நீர் அருந்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்