Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குறைந்த விலையில் 3 மாதம் ஆனாலும் கெடாத பால்… ஆவின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…

Gowthami Subramani November 02, 2022 & 16:55 [IST]
குறைந்த விலையில் 3 மாதம் ஆனாலும் கெடாத பால்… ஆவின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…Representative Image.

ஆவின் நிர்வாகம், ஆவின் டிலைட் என்ற பசும்பால விநியோகத்தைத் தொடங்கியுள்ளது. இது மூன்று மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாததாக இருக்கும் என ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

உணவுப் பொருள்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது முதல், ஒவ்வொரு பொருள்களுமே பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பால் மற்றும் பால் சார்ந்த அனைத்து பொருள்களுமே அடங்கும்.

பொதுவாக, கிராமப் புறங்களில் வீடுகளில் வளர்த்து வரும் பசுவிடம் இருந்து கரந்து, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இவை பால் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதுடன், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டில் இருக்கும் பால் எந்த வித குளிரூட்டமுமின்றி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் இருப்பதற்கு தீங்கு விளைவிக்காத வேதிப் பொருள்கள் குறிப்பிட்ட அளவு செலுத்தப்படுகிறது.

இந்த வகையான பால் பாக்கெட்டுகள், குளிர்பதன நிலையில் எத்தனை நாள்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதும் அந்தந்த பாக்கெட்டுகளிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கும். அதன் படி, நாம் தினசரி பயன்படுத்தும் போது, கடையில் இருந்து பால் வாங்கிய பிறகு ஒரு நாள் மட்டுமே கெடாமல் இருக்கும் அல்லது கிட்டத்தட்ட ஒன்றரை நாள்கள் வரை கெடாமல் இருக்கலாம்.

இந்த நிலையில், ஆவின் நிர்வாகம் வெளியிட்ட இந்த புதிய ஆவின் டிலைட் என்பது எந்த வித குளிர்பதன வசதியும் இல்லாமல், அதிகபட்சம் மூன்று மாதங்கள் அதாவது 90 நாள்கள் வரை சேமித்து உபயோகம் செய்யலாம் எனவும், இதன் விலையானது 500 மிலி பால் பாக்கெட்டுக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலில் எந்த வகையான வேதிப்பொருள்களும் சேர்ப்பதில்லை எனவும், நவீன தொழில்நுட்ப முறையிலே இது தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்