Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறைந்த நடிகருக்கு கர்நாடக ரத்ன விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார்!

Priyanka Hochumin November 01, 2022 & 18:30 [IST]
மறைந்த நடிகருக்கு கர்நாடக ரத்ன விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார்!Representative Image.

கர்நாடக அரசு சார்பில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கலந்து கொள்கிறார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உலா வந்த புனீத் ராஜ்குமாரை, அவரின் ரசிகர்கள் பவர் ஸ்டார், அப்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். ரசிகர்களின் பேரன்பு கொண்ட புனீத் 45 வயதில் அகால மரணம் அடைந்தது கர்நாடகாவில் மட்டும் அல்லாது தென் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வந்தார். இவரின் இந்த உதவி செய்யும் குணத்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதனை நிறைவேற்ற இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் மாலை 4 மணிக்கு விதான சவுதாவின் முன்பகுதி படிக்கட்டுகளில் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் அவரின் மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் கர்நாடக ரத்னா விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்குகிறார்.

பங்கேற்ற பிரபலங்கள் - இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர்., இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி மற்றும் கவுரவ விருந்தினர்களாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி, மேல்-சபை தலைவர் ரகுநாத் மல்காபுரே ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன் எம்.பி. ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கர்நாடக ரத்னா விருது வாங்கும் 10வது நபராக புனீத் ராஜ்குமார் திகழ்கிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்