Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமலாக்கத்துறை நடவடிக்கை திமுகவுக்கே நெஞ்சுவலிதான்..! டிடிவி தினகரன் பேட்டி..!!

Saraswathi Updated:
அமலாக்கத்துறை நடவடிக்கை திமுகவுக்கே நெஞ்சுவலிதான்..! டிடிவி தினகரன் பேட்டி..!!Representative Image.

தமிழகத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்ல திமுகவுக்கே நெஞ்சுவலியை ஏற்படுத்தும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின்  செயற்குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  கட்சி தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது, மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம், சாலை வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு தமிழக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், செந்தில்பாலாஜி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்கிறது.  அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும், விசாரணையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அமலாக்கத்துறையின் விசாரணையால் செந்தில்பாலாஜிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுகவுக்கே நெஞ்சுவலி வந்துவிட்டது.  உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத்  தொடர ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் புரிதல் இல்லாமல் இருந்தால் அது மக்களை பாதிக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு  ஆதரவாக செயல்பட வேண்டியதுதான் ஆளுநரின்   பணி. அரசு தவறு செய்தால் அதை தட்டி கேட்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது. இலாகா இல்லாத அமைச்சர்கள் கடந்த காலத்திலும் இருந்துள்ளார்கள் என்றார்.  

மோடியை எதிர்க்கும் ஒரே தலைவர் ஸ்டாலின் தானா?  என்ற கேள்விக்கு, ஸ்டாலின் அமலாக்கத்துறையை முதலில் எதிர்க்கட்டும் பிறகு மோடியை எதிர்கட்டும் என்று பதிலளித்தார்.  ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என நடிகர் விஜய் கூறியது நல்ல கருத்து எனக் கூறிய டிடிவி தினகரன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள் ஆதரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்