Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி...!

madhankumar July 28, 2022 & 15:04 [IST]
பிரபல நடிகர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி...!Representative Image.

பிரபல நடிகரும், இயக்குனருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜி.எம். குமார் பிரபு, பல்லவி நடிப்பில் வெளியான ‘அறுவடை நாள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, பிக் பாக்கெட், இரும்புப்பூக்கள் மற்றும் உருவம் ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்.

இயக்கம் மட்டுமல்லாமல் ஒரு நடிகராக கேப்டன் மகள், வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்புத்திறமை பலராலும் பாராட்டப்பட்டது. பாண்டியராஜன் இயக்கியத்தில் வெளியான ‘கன்னிராசி’படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமார் எழுதியுள்ளார். மேலும் பிரபுவின் ‘மை டியர் மார்த்தாண்டன்’ படத்தின் கதையையும், கமலின் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஜி.எம். குமார் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்