Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

MBA, MCA, படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.!

madhankumar June 06, 2022 & 16:02 [IST]
MBA, MCA, படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.!Representative Image.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் தற்போது இளங்கலை, டிப்ளமோ, மற்றும் எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பத்தை தொடங்கியுள்ளது. இதில் ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் வருகிற ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி மற்றும் தொலைதூர கற்றல் ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் பாடத்திட்டங்கள் வழங்கப்படும் என இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி. எஸ்.சி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனால் ஒருமானவர் கட்டண விலக்கு பெற ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று முடிந்த பிறகு உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://scholarships.gov.in/  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்திய அரசின் உதவித்தொகையை பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்யும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தின் போது, கல்வித் தகுதி சான்றிதழ், வயதுக்கான சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ், பணி அனுபவ சான்றிதழ் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அதனையும் இணைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாதி தான்றிதழ், வறுமை கோட்டு சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், கையெழுத்து நகல் உள்ளிட்ட ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்