Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு....கண்ணீரோடு வெளியேறிய பன்னீர்...!

madhankumar June 23, 2022 & 13:02 [IST]
அதிமுக பொதுக்குழுவில் பரபரப்பு....கண்ணீரோடு வெளியேறிய பன்னீர்...!Representative Image.

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானரகத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை பிரச்னை உருவெடுத்தது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை வேண்டாம் என கோரிக்கைகள் வைத்தனர், பின்னர் இதுகுறித்து மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி தீர்மானங்கள் நிறைவேற்ற தடைகள் இல்லை என தீர்ப்பளித்தார்.

மேல் முறையீடு:

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்தது, அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனி நீதிபதியின் தீர்ப்பை மாற்றி 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற கூடாது எனவும் முக்கியமாக ஒற்றை தலைமை குறித்து முடிவுகள் எடுக்க கூடாது என தீர்ப்பை மாற்றி தீர்ப்பளித்தது.

பொதுக்குழு:

இதனிடையே இன்று தாமதமாக தொடங்கப்பட்ட பொதுக்குழுவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னதாக வந்தார், அரங்கிற்கு முதலில் நுழைந்தாலும் மேடையில் அவர் ஏறவில்லை. அதனையடுத்து மேடையில் அமர்ந்திருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் துரோகி எழுந்து வெளியே போ என கூச்சலிட்டனர். இதனால் மேடையில் இருந்து அவர் வெளியேறினார்.

பின்னர் நீண்ட தாமதத்திற்கு பின் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனி சாமி மேடையில் ஏறினார். அதன் பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மேடைக்கு வந்தார். அப்போது அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பொதுக்குழு நடப்பது குறித்து ஓபிஎஸ் முன் மொழிந்தார் அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிந்தார்.

பின்னர் குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிக்கிறோம் என என கோஷமிட்டார். அதன் பின்னர் எழுந்துவந்து கே.பி. முனுசாமி குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இன்று நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என கூறினார். மேலும் ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை சேர்த்து அடுத்து நாடாகும் கூட்டத்தில் அணைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

அதிமுகவின் புதிய அவை தலைவர்:

அடுத்ததாக பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக அதிமுகவின் அவை தலைவராக தமிழ் மகன் உசேனை தேர்ந்தெடுக்கிறோம் என கூறினார். 

ஓபிஎஸ் தரப்பு வெளிநடப்பு:

பின்னர் அங்கிருந்து ஆவேசமாக எழுந்த ஓபிஎஸ் தரப்பு சட்டத்திற்கு புறம்பாக இந்த பொது குழு நடைபெறுகிறது எனவே நங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என கூறி வெளியேறினார். அப்போது எடப்பாடி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மீது காகிதங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வெளியே சென்ற ஓபிஎஸ் அவரின் வாகனத்தில் எற செல்லும்போது அவரின் வாகனத்தின் டயரில் காற்றை பிடுங்கிவிட்டு இபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடுத்த பொதுக்குழு எப்போது:

அடுத்து பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் குழு உறுப்பினர்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்று இந்த பொதுக்குழுவானது ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் ஜூலை 11 தேதி காலை 9:15 க்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வரலாற்றிலேயே பொதுக்குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். 

அடுத்ததாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை ஏற்று நடத்தவேண்டும் என முன்மொழிந்தனர்.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு:

இந்நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அவர் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்