Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்து வெடி விபத்து; பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் அதிரடி எச்சரிக்கை! 

KANIMOZHI Updated:
அடுத்தடுத்து வெடி விபத்து; பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அமைச்சர் அதிரடி எச்சரிக்கை! Representative Image.

சட்டத்துக்கு புறம்பாக பட்டாசு தொழிற்சாலை நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்திலும், அதனைத் தொடர்ந்து தாயில்பட்டி கிராமத்திலும், அடுத்தடுத்து நடந்த பட்டாசு தொழிற்சாலைகளின்  விபத்துகளில், ஒரு பெண் தொழிலாளி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக அமைச்சர் கே.கேஎஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்தை தடுக்க சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுத்தாலும் கூட, அதனையும் மீறி விபத்து என்பது நடைபெற்று வருகிறது. விபத்துகளை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். 

 

அதனைத் தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்களை அழைத்து பேசி விபத்தை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட விருதுநகர் நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதின் பேரில் சிவகாசிக்கு வந்து காயமடைந்த பட்டாசு தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தெரிவித்த அமைச்சர், பட்டாசு தொழிற்சாலை விபத்துகளை தடுத்து அதன் மூலமாக ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து எச்சரிக்கை செய்வதாகவும் கூறினார். 

 

பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் ஒருவர் பெயரில் இருந்து, மற்றொருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் பட்டாசு தொழிற்சாலை செயல்படுத்தினால் அது சட்டப்படி தவறு. அவ்வாறு செய்யும் பட்சத்தில் பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் ரத்தாகும். இதுதான் நடைமுறை. பட்டாசு தொழிலையும் பாதுகாத்து ,விபத்து நடக்காமல் உயிர்ச்சேதம் ஏற்படாமலும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளதாகவும், சட்டத்துக்கு புறம்பாக நடைபெற்று வரும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்