Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்னிபாத் வேண்டாம்.. மத்திய அரசுக்கு எதிராக.. வெடித்தது போராட்டம்!!

Sekar June 16, 2022 & 11:54 [IST]
அக்னிபாத் வேண்டாம்.. மத்திய அரசுக்கு எதிராக.. வெடித்தது போராட்டம்!!Representative Image.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மத்திய அரசின் புதிய திட்டமான அக்னிபாத் திட்டத்தைத் தொடங்கிய பின்னர், பீகாரின் பல மாவட்டங்களில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இராணுவ பணி ஆர்வலர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை சீர்குலைத்தனர். குறிப்பாக பக்சர் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து தண்டவாளத்தில் அமர்ந்து, பாட்னா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸின் முன் மறியல் செய்து ரயிலை அரைமணிநேரம் தடுத்தனர்.

அக்னிபாத் திட்டம் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும் என்று காங்கிரஸ் எச்சரித்த நிலையில், பீகாரில் போராட்டம் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த திட்டத்தால் இராணுவ வீரர்களின் எதிர்காலம் குறித்து கடுமையான அச்சங்களை வெளிப்படுத்தியது, அவர்களில் பெரும்பாலோர் நான்கு ஆண்டுகள் குறுகிய சேவைக்குப் பிறகு மிகவும் இளம் வயதில் ஓய்வு பெற்றால் எதிர்காலம் என்னாவது என்பது குறித்து கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்