Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு....வானகரத்தில் கூடும் பொதுமக்கள்..!

madhankumar June 23, 2022 & 10:02 [IST]
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு....வானகரத்தில் கூடும் பொதுமக்கள்..!Representative Image.

அதிமுக பொதுக்குழு கூட்டம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் இன்று நடைபெறுகிறது. ஒற்றை தலைமை தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு பின்னர் மேல் முறையீட்டில் விடிய விடிய வாதிடப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமை கனவிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று அதிமுகவின்  பொதுக்குழு  வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 6 மணியில் இருந்தே தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இங்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்பட கூடாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அடுத்து நடைபெறும் பொது குழு கூட்டத்தில் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனி சாமி ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவில் மொத்தம்  23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட முடியாது.

மேலும் இந்த பொதுக்குழுவில் அழைப்பிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவையே வைத்திருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் வருகை பதிவேடு முறை கடந்த எந்த ஆண்டுகளிலும் பின்பற்றப்படாத முறை தற்போது பின்பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் வருகை பதிவு பெறப்படுகிறது. அதிலும் ஒரு சில உறுப்பினர்கள் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதில் நிர்வாகிகளில் சிலர் எம்ஜிஆர் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்று வேடமணிந்து கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வீட்டின் முன் நிர்வாகிகள் ஏராளமானோர் கூடி  வருகின்றனர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது பலத்தை காண்பிக்க பிரமாண்ட பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பறை, மேளம், செண்டை, கரகம் என பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2500 பேர் வரை கண்டிப்பாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்