Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தரையிறக்கம் | Air India Flight Landed in Russia

Priyanka Hochumin Updated:
ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தரையிறக்கம் | Air India Flight Landed in RussiaRepresentative Image.

நியூ டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், திடீரென தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

நேற்று [ஜூன் 6,2023] அன்று நியூ டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட AI173 ஏர் இந்தியா விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் பயணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திடீரென இன்ஜின் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக விமானத்தை ரஷ்யாவில் உள்ள மகடன் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் கூடிய விரைவில் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று தீர்வு கண்டு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை சோதனை செய்யப்பட்டு தகவல் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்