Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியா விவசாயிகளுக்கான மானியத்தை நிறுத்தணுமாம்.. அமெரிக்க எம்பிக்கள் கொக்கரிப்பு!!

Sekar July 03, 2022 & 11:37 [IST]
இந்தியா விவசாயிகளுக்கான மானியத்தை நிறுத்தணுமாம்.. அமெரிக்க எம்பிக்கள் கொக்கரிப்பு!!Representative Image.

இந்திய அரசு விவசாயிகளுக்கு அதிக மானியம் அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பிடெனுக்கு அந்நாட்டு எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க பாராளுமன்ற எம்பிக்கள் டிரேசி மான், ரிக் கிராபோர்டு உட்பட சுமார் 12 எம்பிக்கள் இந்தியா அதிக அளவில் மானியம் கொடுப்பதை தடுத்து நிறுத்த உலக வர்த்தக அமைப்பில் பேச வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

எம்பிக்கள் தங்கள் கடிதத்தில் மேலும், "உலக வர்த்தக அமைப்பின் விதியின் படி, எந்த ஒரு நாடும் தன் நாட்டில் விவசாயிகளுக்கு 10 சதவீதத்துக்கு மிகமலே மானியம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு நெல், கோதுமை உட்பட பல விவசாய உற்பத்தி பொருட்களுக்காக 50 சதவீதம் வரை மானியத்தை வாரி வழங்குகிறது.

இது குறித்து பல முறை முறையிட்டும், இந்தியா தனது நிலைப்பாட்டில் இருந்து மாற மறுக்கிறது. இந்தியாவின் இந்த செயலால் சர்வதேச அளவில் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இது அமெரிக்காவின் பண்ணையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே இந்தியாவின் இந்த ஆபத்தான வர்த்தக நடைமுறைக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் விவாதம் மேற்கொள்ள அமெரிக்க அரசு வலியுறுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக இந்தியா விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வரும் நிலையில், இப்போது இந்த பிரச்சினை அமெரிக்க எம்பிக்கள் மூலம் கிளறப்படுவதன் பின்னணியில் உக்ரைன் விவகாரமே இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு பணியாமல், தான்தோன்றித்தனமாக இந்தியாவின் நலனை பிரதானமாக முன்வைத்து ரஷ்யாவுடன் இந்தியா உறவாடுவது அமெரிக்காவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், இன்றைய புவிசார் அரசியலில் இந்தியாவின் தேவை மேற்குலக நாடுகளுக்கு அதிகம் உள்ளதால் நேரடியாக இந்தியாவை எதிர்க்க முடியாமல் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதை மனதில் வைத்தே இந்தியாவை சீண்டிப் பார்க்கும் விதமாக இந்தியா தனது விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதை தடுக்க வேண்டும் என எம்பிக்களை பேச வைத்து குளிர்காய்வதாகக் கூறப்படுகிறது. எனினும் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்த முடியாது என தொடர்ந்து இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கு பல மூன்றாம் உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்