Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணை முதல்வர் மனைவிக்கே வலை வீசிய அப்பா - மகள்.. போலீசாரின் ரகசிய வேட்டையில் சிக்கியது எப்படி?

Nandhinipriya Ganeshan Updated:
துணை முதல்வர் மனைவிக்கே வலை வீசிய அப்பா - மகள்.. போலீசாரின் ரகசிய வேட்டையில் சிக்கியது எப்படி?Representative Image.

கிரிக்கெட் சூதாட்டக்காரர் அனில் ஜெய்சிங்கனி மீது சூதாட்டம், பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன. இதையடுத்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி அனில் ஜெய்சிங்கனி கைது செய்யப்பட்டார். பின்னர், போலீசில் இருந்து எப்படியோ தப்பித்து குஜராத்தில் தலைமறைவாகி வாழ்ந்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் இவரும், இவருடைய மகள் அனிஷிகாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த வழக்கில் நேரடியாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். என்ன பிரச்சனை, இவர்களுக்கும் அனில் ஜெய்சிங்கனிக்கும் என்ன சம்பந்தம் என்பதை விரிவாக பார்க்கலாம். 

கடந்த 2021 நவம்பரில் அனிஷிகாவை அம்ருதா சந்திருட்திருக்கிறார். அப்போது காலணிகள், ஆடைகள் மற்றும் பேக் வடிவமைக்கும் வடிவமைப்பாளாராக தன்னை அறிமுகம்படுத்திய அனிஷிகா(27) அம்ருதா பட்நாவிஸிடம் எனக்கு தாய் இல்லை என்றும், என் அப்பா மீது பல வழக்குகள் இருக்கிறது அதிலிருந்து அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். உங்களுக்கு நான் சில கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் பற்றி சொல்கிறேன், அதை நீங்க போலீசில் கூறினால் வேறு சிலரிடம் இருந்து நமக்கு பணம் கிடைக்கும்.

அதில் உங்களுக்கு 1 கோடி ரூபாய் கிடைக்கும் என்றெல்லாம் அனிஷிகா அம்ருதாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அம்ருதாவும் அனிஷிகாவும் இதே விஷயத்தையும் வாட்ஸ் அப் மற்றும் ஃபோன் மூலம் தொடர்ந்து பேசியுள்ளனர். அதையெல்லாம் ரெக்கார்ட் செய்த அனிஷிகா, அம்ருதாவிடம் நீங்க போனில் பேசியதை எல்லாம் வெளியே விட்டுவிடுவேன். இதனால் உங்களுக்கு தான் அசிங்கம். இதெல்லாம் நடக்க கூடாது என்றால் என்னுடைய அப்பா மீதுள்ள 17 வழக்குகளை நீங்கள்தான் நீக்கி அவரை காப்பாற்ற வேண்டும் என்று மிரட்ட தொடங்கியிருக்கிறார். 

இதையடுத்து கடந்த பிப்ரவரி 20 தேதி மும்பை மலபார் போலீசில் அம்ருதா அனில் ஜெய்சிங்கனி குறித்தும், அனிஷிகா குறித்தும் ரகசியமாக புகார் அளித்திருக்கிறார். அனிஷிகா கொடுத்த புகாரின் பேரில் அனில் ஜெய்சிங்கனி மற்றும் அனிஷிகா மீது இந்திய சட்டத்தின் 120 பி (சதி), 383 (பணப்பறிப்பு) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல விதிகளின் கீழ் ரகசிய வழக்கு பதியப்பட்டது. பின்னர், அம்ருதாவிடம் பேசிய போலீசில் புகார் கொடுத்தது ரகசியமாகவே இருக்கட்டும், இதை அனிஷிகாவுக்கு தெரிய வேண்டும். அவரிடம் தொடர்ந்து பேசுங்கள் அப்போதுதான் அவர்களை டிரேஸ் செய்யமுடியும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் கூறியது போலவே பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு பிறகு அனில் ஜெய்சிங்கனிடம் போனில் பேசியுள்ளார் அம்ருதா. அப்போது நீங்க எந்த வழக்கிலாவது தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தால், தனது தேவேந்திர பட்னாவிஸிடம் பேசி உங்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கிறேன். ஆனால் இதற்காக உங்க மகள் என்னை பிளாக்மெயில் செய்தது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல், என்னை அவமானப்படுத்தினாலும் எனக்கு கவலைக்கிடையாது. நீங்க தப்பு செய்யவில்லை என்றால் உங்களுக்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அம்ருதா தனக்கும் தனது கணவர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் சுமுகமான உறவு இல்லை என்றும் அனில் ஜெய்சிங்கனி கூறியுள்ளார். இது போலீசார் வழிகாட்டுதலின்படி அம்ருதா கூறியது. பின்னர், போனில் பேசுவதற்கு பதிலாக, ஏதாவது இடத்தில் அனிஷிகாவை சந்திக்க தயார் அம்ருதா கூறியுள்ளார். அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது போனை டிரேஸ் செய்து அனில் ஜெய்சிங்கனி இருப்பிடித்தை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த மார்ச் 16 ஆம் தேதி அனிஷிகாவையும், மார்ச் 20 ஆம் தேதி அனில் ஜெய்சிங்கனியையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் மனைவி நேரடியாக சம்பந்தப்பட்டு இருப்பது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்