Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆட்சியை பிடித்ததும் சொன்னதை செய்து காட்டிய காங்கிரஸ்.. இனி பெண்களுக்கு இலவசம்..

Nandhinipriya Ganeshan Updated:
ஆட்சியை பிடித்ததும் சொன்னதை செய்து காட்டிய காங்கிரஸ்.. இனி பெண்களுக்கு இலவசம்.. Representative Image.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி கட்டிலில் அமர்ந்தையடுத்து அக்கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குரியான பெண்களுக்கு இலவச பேருந்து கட்டணம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், பல சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து கர்நாடாகவிலும் இத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது. ஆனாலும் சில நிபந்தனைகளுடன். 

கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அம்மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். இந்நிலையில், மாநில அரசு கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'சக்தி யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, ஜூன் 11 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

எனினும் சில நிபந்தனைகள் உள்ளன. அதாவது, இந்த பலனை பெற 'சக்தி ஸ்மார்ட் கார்டுகள்' அவசியம் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் திருநங்கைகளூம் பங்கேற்கலாம். ஸ்மார்ட் கார்டுகளுக்கான விண்ணப்ப செயல்முறை அடுத்த மூன்று மாதங்களுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்த அடையாள அட்டைகளையும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும், இந்த திட்டம் மாநிலங்களுக்குள் மட்டுமே பொருந்தும், எந்த மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சொகுசு பேருந்துகளான ராஜஹம்சா, ஏசி அல்லாத ஸ்லீப்பர், வஜ்ரா, வாயு வஜ்ரா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், அம்பாரி, அம்பாரி ட்ரீம் கிளாஸ், அம்பரி உத்சவ் ஃப்ளை பஸ், ஈவி பவர் பிளஸ் போன்றவை இலவச பயண திட்டத்தில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்