Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apple Ceo in India | இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஆப்பிள் சிஇஓ டிம் குக்..

Nandhinipriya Ganeshan Updated:
Apple Ceo in India | இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஆப்பிள் சிஇஓ டிம் குக்.. Representative Image.

இந்தியாவில் 25 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் இயங்கி வந்தாலும் கூட இந்தியாவில் ஒரு ஆப்பிள் ஸ்டோர் கூட இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஸ்டோரை மும்பையின் ஜியோ வோர்ல்ட் ட்ரைவ் மாலில் அமைத்துள்ளது. இதுவே இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோராகும். இந்த ஸ்டோரை திறந்து வைப்பதற்காக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டிம் குக் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். 

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மும்மையில் முதல் ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்த டிக் குக், இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ஆகியோரையும் சந்தித்தார். பின்னர், அதே நாளில் மும்பையில் பாலிவுட் நடிகையான மாதுரி தீட்சித்துடன் சேர்ந்து டிம் குக் வடா பாவ் சாப்பிட்டார். இது மிகப்பெரிய அளவில் வைரலானது. 

அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 19 ஆம் தேதி டெல்லி வந்த டிம் குக் அங்கு பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஐடி துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரையும் சந்தித்தார். இதையடுத்து ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லியில் சாகேத் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோரை திறந்து வைத்தார். அதன்பிறகு, கலைஞர்கள், சுயதொழில் செய்வோர் என பலரையும் டிம் குக் நேரில் சந்தித்தார். 

மேலும், டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியையும் நேரில் கண்டுகளித்தார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், டிம் குக் இந்தியாவில் இருந்து புறப்பட இருக்கும் சூழலில் இந்தியாவில் செலவழித்த நாட்கள் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததாகவும், நாடு முழுவதும் இருக்கும் ஆப்பிள் குழுக்களுக்கு நன்றி எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும் இந்தியா வருவதற்கு காத்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்