Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆர்டிகிள் 370 நீக்கத்துக்குப் பின்.. காஷ்மீரில் குறைந்த குற்றங்கள்!!

Sekar August 05, 2022 & 16:02 [IST]
ஆர்டிகிள் 370 நீக்கத்துக்குப் பின்.. காஷ்மீரில் குறைந்த குற்றங்கள்!!Representative Image.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை, மூன்று ஆண்டுகளில் காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான குற்றங்கள் 88 சதவிகிதம் குறைந்துள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர். 

ஆகஸ்ட் 5, 2016 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3,686 சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ள காவல்துறை, ஆகஸ்ட் 5, 2019 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 438 சட்டம் ஒழுங்கு குற்ற சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 5, 2019 க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் ஆகஸ்ட் 5, 2019க்கு பின் எந்த ஒரு குடிமகனும் கொல்லப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல், ஆகஸ்ட் 5, 2016 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் ஆறு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் அத்தகைய உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. 

ஆகஸ்ட் 5, 2019 க்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் 930 பயங்கரவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 617 ஆகக் குறைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத சம்பவங்களில் 290 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த எண்ணிக்கை தற்போது 174 ஆகக் குறைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்ற பிற சம்பவங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பொறுத்தவரை, அரசியலமைப்பு மாற்றங்களுக்குப் பிறகு மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 191 இல் இருந்து 110 ஆகக் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் 5 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பின் ஆர்ட்டிகிள் 370 மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்