Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆருத்ரா நிதிமோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல்!

Chandrasekaran Updated:
ஆருத்ரா நிதிமோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல்! Representative Image.

ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையினர் 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், அந்நிறுவனத்தின  நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இந்த வழக்கில் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜன், பேச்சிமுத்துராஜாநடிகர் ரூசோ ஆகியோர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும், பிஜேபி நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆருத்ரா நிதிமோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல்! Representative Image

61 இடங்களில் நடந்த சோதனையில் 6 கோடியே 35 லட்சம் ரொக்கம், ஒரு கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் டெபாசிட், 103 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் டான்பிட் நீதிமன்றம் எனப்படும் தமிழ்நாட்டு முதலீட்டார்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு  காவல்துறை தரப்பில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்யப்பட்ட 50 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையில், முதற்கட்டமாக 360 புகார்களில் தொடர்புடைய 17 கோடியே 50 லட்சம் ரூபாய்  மோசடி  குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்புடைய 3,000 பக்கம் அளவிலான கூடுதல் ஆவணங்களை ஒரு நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவற்றை நீதிபதி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி இவற்றின் நகலை அவர்களுக்கு வழங்குவார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 255 புகார்கள் குறித்த விசாரணைக்கு பிறகு கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்