Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காமராஜர் 120பிறந்த நாள்: பள்ளிகளுக்கு வேலைநாட்களாக அறிவிப்பு

Baskaran Updated:
காமராஜர் 120பிறந்த நாள்: பள்ளிகளுக்கு வேலைநாட்களாக அறிவிப்பு  Representative Image.

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகள் அனைத்தும் முழு வேலை நாளாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. காமராஜரின் 120ஆவது பிறந்த தினமான நாளை பள்ளிகள் அனைத்திலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படவுள்ளதால், பள்ளிகள் அனைத்தும் முழு நேரமும் செயல்படும். 

இந்த நாளில் காமராஜர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும். அவரை போற்றும் விதமாக கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தலாம். காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அடுத்தபடியாக மிக பிரமாண்டமாக மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. மதுரையின் அடையாளமாக இந்த நூலகம் இருக்கும் என கூறப்படும் நிலையில், இதில் அதிநவீன அம்சங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் தென்மாவட்ட இளைஞர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களுக்கு சிறந்த களமாக அமைந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்