Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நடுவானில் திடீரென திறந்த விமானத்தின் கதவு.. நடந்தது என்ன?

Nandhinipriya Ganeshan Updated:
நடுவானில் திடீரென திறந்த விமானத்தின் கதவு.. நடந்தது என்ன?Representative Image.

தென்கொரியாவில் பிரபலமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஏசியானா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்தின் ஏர்பஸ் A321-200 என்ற ஜெட் விமானம் ஒன்று, நேற்று ஜெஜு தீவில் இருந்து புறப்பட்டு டேகு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சென்றது. 

இந்த விமானத்தில் மொத்தம் 194 பயணிகள் இருந்துள்ளது. புறப்பட்ட சுமார் ஒரு மணி நேரம் கழித்து விமானம் தரையிரங்க ஆயத்தமானது. அப்போது, விமானம் தரையிலிருந்து 250 மீ தொலைவில் இருந்தது. அந்த சமயத்தில் விமானத்தில் இருந்த பயணி ஒருவர், திடீரென அவசரகால கதவை திறந்துவிட்டார். 

நடுவானில் திடீரென கதவு திறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் அலறத் தொடங்கினர். மேலும், 6 பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருப்பினும், சில நிமிடங்களில் விமானம் திறந்த கதவோடே பத்திரமாக தரையிடக்கப்பட்டது. இதனால், விபத்து தவிர்க்கப்பட்டது. 

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பயணிகள் மருத்துவமனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விமானம் தரையிறங்கும்போது அதன் கதவைத் திறந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்