Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India : கோதுமை ஏற்றுமதிக்கு தடை..? மத்திய அரசு அதிரடி..!

Muthu Kumar May 15, 2022 & 07:30 [IST]
India : கோதுமை ஏற்றுமதிக்கு தடை..? மத்திய அரசு அதிரடி..!Representative Image.

India : இந்தியாவில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.

கோதுமை ஏற்றுமதி தடை 

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் தொடர் விலை ஏற்றத்தை தவிர்க்கவும், கோதுமையை வாங்கும் தனியார் அதிகளவில் ஏற்றுமதி செய்தால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படலாம் என கருதி மத்திய அரசு இந்த தடையை எடுத்துள்ளது.

பற்றாக்குறை

கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா ஏற்றுமதியை தடை செய்துள்ளதால், உக்ரைன் போர் காரணமாக விநியோக பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மேலும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. 

விவசாயத்துறை மந்திரி

இந்நிலையில், ஜி7 தொழில்மயமான நாடுகளின் குழுவைச் சேர்ந்த விவசாயத்துறை மந்திரிகள்  இந்தியாவின் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதேபோல், எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தால் அது நெருக்கடியை இன்னும் மோசமாக்கும் என ஜெர்மன் விவசாயத்துறை மந்திரி செம் ஓஸ்டெமிர், ஸ்டட்கார்ட்டில் செய்தியாளிடம் தெரிவித்தார்.

நடவடிக்கை 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலகளாவிய விவசாய சந்தைகள் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் நிலையில், இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உலக நாடுகளை ஜி7 குழுவைச் சேர்ந்த விவசாயத்துறை மந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜி7 மாநாடு

ஜூன் மாதம் ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்