Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துபாய்க்கு தப்பிக்க முயற்சி.. கடும் எதிர்ப்பு.. ராஜபக்சவை வெளியேற்றிய அதிகாரிகள்!!

Sekar July 12, 2022 & 12:26 [IST]
துபாய்க்கு தப்பிக்க முயற்சி.. கடும் எதிர்ப்பு.. ராஜபக்சவை வெளியேற்றிய அதிகாரிகள்!!Representative Image.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் இளைய சகோதரரான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று மாலை துபாய் செல்லும் விமானத்தில் நாட்டிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில், விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவர் விமானத்தில் நாட்டிலிருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து முறியடிக்கப்பட்டது. அங்கிருந்த பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரைத் தடுத்து திருப்பி அனுப்பினர்.

குடிவரவு அதிகாரிகள் மறுத்ததையடுத்து, பசில் துபாய் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல நேரிட்டதாக இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து, கோத்தபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெளிவுபடுத்திய நிலையில், அடுத்த நாளே அவரது தம்பி நாட்டிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார்.

சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு ஓடிவிட்டதாக முன்னதாக கூறப்பட்டது.

இதற்கிடையே 1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்